தமிழ்

‘ஆடவர் உதவி இணைப்பு ஆஸ்திரேலியா’  (MensLine Australia) என்பது  ஆடவர் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்கள் ஆகியோருக்கான தேசியத் தொலைபேசி மற்றும் இணையவழி ஆதரவுதவி, தகவல் மற்றும் பரிந்துரை அளிக்கும் சேவையாகும், மற்றும் இந்தத் தொலைபேசி வசதி நாள் நெடுக எந்த நேரத்திலும் கிடைக்கும்.

 

‘ஆடவர் உதவி இணைப்பு ஆஸ்திரேலியா’-வின் பணியாளர்களானவர்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கிய ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிய அனுபவம் வாய்ந்த தொழில்ரீதி வல்லுனர்களாவர்:

 • வீட்டில் அல்லது வாழ்க்கைத்துணை உறவுகளில் வன்முறையைப் பாவித்தல் அல்லது வன்முறைக்கு ஆட்படுதல்
 • ஆடவர் மன நலம் மற்றும் சமூக நலம்
 • குடுமபம் மற்றும் வாழ்க்கைத்துணை உறவு குறித்த விடயங்களில் சிரமங்கள்
 • சினத்தைக் கட்டுப்படுத்துவதில் பிரச்சினை
 • போதைவஸ்துத் துஷ்ப்பிரயோகம்
 • ஒட்டுமொத்தப் பொது நலம், இன்னும் பல விடயங்கள்

 

அனைத்து விதமான உறவுகளிலும், சூழ்நிலைகளிலும் ஆதரவுதவி தேவைப்படும் ஆண்களுக்கு உதவுவதற்காகவே நாங்கள் இருக்கிறோம்.

 

‘ஆடவர் உதவி இணைப்பு ஆஸ்திரேலியா’ வழங்கும் சேவைகளாவன:

 • கவலைகள் மற்றும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்குப் பாதுகாப்பான மற்றும் அந்தரங்கமான இடம்
 • நீங்கள் இப்படிப்பட்டவர்தான் என்று முடிவுகட்டிவிடாமல் உங்ளுக்கு ஆதரவுதவியளித்தல்
 • ஒருவரது சொந்தப் பிரச்சினைகளைக் கட்டுப்படுவதற்கான பயிற்சி மற்றும் நடைமுறைக்கேற்ற யுக்திகள்
 • சேவைகள் மற்றும் உதவித் திட்டங்களைப் பற்றிய தகவல்கள், தொடர்புகள் மற்றும் அவற்றிற்கான பரிந்துரைகள்
 • ஆதரவுதவியை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பெறலாம் – உள்ளூர்த் தொலைபேசி அழைப்புக் கட்டணத்திற்கு

எம்முடன் பேச 1300 78 99 78-ஐ அழையுங்கள்.

 

மொழிபெயர்ப்பு சேவை

ஆங்கிலம் பேசாத எவரொருவருக்கும் உதவுவதற்காக ‘மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவை’ (The Translating and Interpreting Service (TIS)) உள்ளது. ‘ஆடவர் உதவி இணைப்பு ஆஸ்திரேலியா’-வை அழைக்கும்போது, மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் வேண்டுமென நீங்கள் கேட்கலாம். சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்ட பிறகு, மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவருடன் கலந்துரையாடல் ஒன்றில் உங்களுக்கு மீண்டும் இணைப்பு ஏற்படுத்தித் தரப்படும். மாறாக, 131 450-இல் TIS -ஐ அழைத்து, ‘ஆடவர் உதவி இணைப்பு ஆஸ்திரேலியா’-வை அழைக்குமாறு நீங்கள் அவர்களைக் கேட்கலாம்.